புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை Share

2011-09-30 14:19:33 [views = 469]புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பாடசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளின் பிரகாரம் புன்னாலைகட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என அண்மையில் பெயர்மாற்றம் பெற்றது.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் punnalaikkadduvan@hotmail.fr   skype= pirasath20
இப்பாடசாலையின் பெயர் மாற்றப்பட்டபின் இடம்பெறும் முதலாவது பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை 01.10.2011 காலை 8.30 மணிக்கு அதிபர் த.லோகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்விப் பணிப்பாளர் ஆ.இராஜேந்திரனும் சிறப்பு விருந்தினராக உடுவில் கோட்டப் பணிப்பாளர் செ.குபேரநாதன், வடமாகாண கல்வி திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் நா.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொள்வர்.


பாடசாலை வளர்ச்சியில் அரும்பங்காற்றும் வைத்திய கலாநிதி ஆ.திருநாவுக்கரசு அவர்களைக் கௌரவித்தல் மற்றும் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன. இதே வேளை பெயர் மாற்றப்பட்ட பாடசாலைக்காகப் புதிய பாடசாலைக் கீதம் ஆக்கப்பட்டுள்ளது.